வாய் துர்நாற்றத்தை தவிர்ப்பதற்காக பலரும் மவுத் ஃப்ரெஷ்னர்களை பயன்படுத்துவது தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஒருசிலர் டாக்டர்களின் பரிந்துரை இல்லாமலேயே மவுத் ஃப்ரெஷ்னர்களை வாங்குகின்றனர். தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது, ஆரோக்கியம் கேள்விக்குறியாவதுடன், பட்ஜெட்டும் எகிறக்கூடும். இதுபோன்ற சூழலில் ஆரோக்கியத்தை மேம்படுத்த, உங்கள் வீட்டின் கிச்சனிலேயே பல்வேறு இயற்கையான ஃப்ரெஷ்னர்கள் உள்ளன. இவற்றை வெளியே எடுத்துச் செல்வதும் எளிதானதே. அவற்றில் சில...
ஏலக்காய்
புத்துணர்ச்சியூட்டும் முக்கியப் பொருட்களில் ஒன்றாக ஏலக்காய் உள்ளது. துர்நாற்றத்தை எதிர்த்துப் போராட பாரம்பரிய மருத்துவத்தில் இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
பெருஞ்சீரகம்
பொதுவாக செரிமானத்தை ஊக்குவிக்க உணவு சாப்பிட்ட பின்பு பெருஞ்சீரகம் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு சிறந்த மவுத் ப்ரெஷ்னராக செயல்படுகிறது. பெருஞ்சீரகம் உமிழ்நீர் உற்பத்தியை ஊக்குவிப்பதுடன்,வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கிருமிகளுடன் போராடுகிறது. துர்நாற்றத்தை குறைப்பதுடன், அமிலத்தன்மையையும் எளிதாக்குகிறது. எனவே, உங்களின் சுவாசத்தை இயற்கையாக புத்துணர்ச்சியடையச் செய்ய சில பெருஞ்சீரக விதைகளை அவ்வப்போது சாப்பிடலாம்.
கிராம்பு
இந்திய உணவுகளில் கிராம்பு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. உணவின் நறுமணத்தையும் சுவையையும் இது மேம்படுத்துகிறது. பல்வலியைக் குறைக்கக்கூடிய பேஸ்ட், மவுத்வாஷ் போன்ற ஆயுர்வேத மருத்துவப் பொருட்களிலும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. கிராம்புகளில் உள்ள யூஜெனோலின் பண்புகள், துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுகிறது.
கொத்தமல்லி விதைகள்
கொத்தமல்லி விதைகள் அல்லது தனியா ஒரு அற்புதமான இயற்கையான மவுத் ஃப்ரெஷ்னராக உள்ளது. கொத்தமல்லி விதைகளின் சுவையானது வெங்காயம், பூண்டு ஆகியவற்றின் வலுவான உணவு நாற்றங்களை மறைக்க உதவுகிறது. எனவே, கொத்தமல்லி விதைகளை ஒரு சிட்டிகை உப்புடன் வறுத்து பயன்படுத்தலாம்.
வாய் துர்நாற்றத்தை தவிர்ப்பதற்காக பலரும் மவுத் ஃப்ரெஷ்னர்களை பயன்படுத்துவது தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஒருசிலர் டாக்டர்களின் பரிந்துரை இல்லாமலேயே மவுத் ஃப்ரெஷ்னர்களை
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement