வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
பிரிட்டனை சேர்ந்த பி.பி.சி., நிறுவனம், 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இதில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புபடுத்தியுள்ளனர். இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த படத்திற்கு தடையும் விதிக்கப்பட்டது. இந்த ஆவணப்படம் குறித்த பதிவுகள், காட்சிகள், வீடியோக்கள் ஆகியவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பிரசாத் பூஷண், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹவா மொய்தாரா உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், தடை விதித்த உத்தரவு ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் . மேலும் இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கவும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.