திண்டுக்கல்: திண்டுக்கல் சிறுமலை மாஞ்சக்காடு பகுதியில் விவசாயி தனுஷ்கோடி50, என்பவர் தோட்டத்தில் பயிரிடப்பட்ட 'சவ்சவ்'காய்கறி ஒன்று சேவல் வடிவத்தில் உருவானது.இதை அப்பகுதியினர் ஆர்வத்தோடு பார்த்து செல்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை மாஞ்சக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி தனுஷ்கோடி.இவர் அங்கு தன்னுடைய 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.இந்நிலையில் தனுஷ்கோடி 2022 நவம்பரில் 'சவ்சவ்'காய்கறி உற்பத்தி செய்ய 1 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டார்.அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள சவ்சவ் காய்கறிகளை அறுவடை செய்ய தனுஷ்கோடி தன் குடும்பத்தினருடன் தோட்டத்தில் வேலையை தொடங்கினார்.
அப்போது செடியில் ஒரு'சவ்சவ்' காய்கறி மட்டும் தலையில் கொண்டை,கால் உள்ளிட்ட சேவல் வடிவத்தில் இருந்தது.இதை பார்த்து நெகிழ்ச்சியடைந்த அவர் தன் அலைபேசியில் அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.அதை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன்,ஆர்வமாக சேவல் வடிவத்தில் உடைய சவ்சவ் காய்கறியை பார்க்கின்றனர். இதை அறிந்த சிறுமலை சுற்றுவட்டார பகுதியினரும் தனுஷ்கோடியின் தோட்டத்திற்கு வந்து காய்கறியை ஆச்சர்யமாக பார்த்து செல்கின்றனர்.
தனுஷ்கோடி,விவசாயி,சிறுமலை:நான் 30 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் பகுதியில் விவசாயம் செய்கிறேன்.முதல் முறை யாக சேவல் வடிவத்தில் சவ்சவ் காய்கறி உற்பத்தியாகி உள்ளது.
இதை பார்க்கும் போது எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது.காய்கறிகள் மனித உருவம்,விலங்குகள் வடிவத்தில் இருக்கும் என செய்திகளில் தான் பார்த்து இருக்கிறேன்.ஆனால் தற்போது நேரில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.மாஞ்சக்காடு சுற்றியுள்ள பகுதி மக்களும் வியந்து பார்த்து செல்கின்றனர்.என் தோட்டத்தில் அதை பொது மக்கள் பார்வைக்காக வைத்திருக்கிறேன் என்றார்.