கோவை: கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் அருகே மதுவிலக்கு போலீசார் இன்று நடத்திய அதிரடி வேட்டையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திலீப் குமார் 38 என்பவர் மொபட்டில் கடத்தி வந்த ஒரு மூட்டை போதை சாக்லேட் பிடிபட்டது.
இதையடுத்து அவரது மளிகை கடையில் சோதனை செய்தபோது 160 கிலோ எடையுள்ள 27,040 சாக்லேட்டுகள் 10 லட்சத்து 82,000 மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டன. சாக்லெட்டுகள் கடத்த பயன்படுத்திய மொபட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா சாக்லேட் குற்றவாளியை பிடித்த மதுவிலக்கு எஸ்ஐ ராஜேஷ் கண்ணா தலைமையிலான குழுவுக்கு கோவை ரூரல் எஸ்.பி. பத்ரி நாராயணன் வெகுமதி அளித்து பாராட்டினார்.