ஹூண்டாய் நிறுவனம் அப்டேட் வெர்ஷனில் 2023 வென்யூ மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் மிட்சைஸ் எஸ்யுவி மாடல்கள் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், மார்ட்கெட்டில் ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா, வென்யூ, கோனா, டக்ஸன் உள்ளிட்ட மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதனைத்தொடர்ந்து சமீபத்தில் வெளியான தனது புகழ்பெற்ற மாடலான ஹூண்டாய் வென்யூ காரை அப்டேட் வெர்ஷனில் அறிமுகம் செய்துள்ளது.
![]()
|
பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான மோட்டார் ஆப்ஷன்களில் 2023 ஹூண்டாய் வென்யூ விற்பனைக்குக் கிடைக்கும். புதிய வென்யூ மாடலில் பவுர்ஃபுல்லான டீசல் என்ஜின் பொறுத்தப்பட்டுள்ளது. அதாவது, தற்போது விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் மாடல்களில் உள்ள அதே 115 பிஎஸ் பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்ட என்ஜின் தான் இந்த புதிய வென்யூ மாடலிலும் பொறுத்தப்பட்டுள்ளது.
![]()
|
அதேசமயம், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு பதிலாக வென்யூ டீசலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகின்றது. இந்த மோட்டார் 116 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், பெட்ரோல் எஞ்ஜினை பொறுத்தவரை, பெட்ரோல் மோட்டார் விஷயத்தில் இரு விதமான தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் எஞ்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ எஞ்ஜின் என இரு விதமான தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 1.2 லிட்டர் மோட்டாரானது 83 பிஎஸ் பவரையும், 114 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.
![]()
|
இரண்டாவது மோட்டாரான 1.0 லிட்டர் டர்போ எஞ்ஜின் அதிகபட்சமாக 120 பிஎஸ் மற்றும் 172 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இத்துடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 6 ஸ்பீடு ஐஎம்டி அல்லது 7 ஸ்பீடு டிசிடி ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. மேலும், புதிய அப்டேட் என்றால், சீட் ரெக்லைனர் மற்றும் ஆர்ம்ரெஸ்ட், கப் ஹோல்டருன் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சமாக, சைடு ஏர் பேக்குகள் என்6 வெர்ஷன் வென்யூவிலும் வழங்கப்பட்டது. ஆட்டோமேடிக் ஹெட்லைட்கள், என்ஜின் இம்மொபைலைசர், பர்க்லர் அலாரம், ரிவர்ஸ் பார்கிங் சென்சார்கள், ரிவர்சிங் கேமரா, டைனமிக் கைடுலைன்கள் உள்ளன.
![]()
|
புதிய 2023 ஹூண்டாய் வென்யூ மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 68 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13 லட்சத்து 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.