புதுடில்லி: வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அசாமின் பார்பேடாவில், கிருஷ்ணகுரு சேவாஸ்ரமம் சார்பில் நடந்த உலக அமைதிக்கான நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அசாம் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.
இந்த பிராந்தியத்தின் பொருளாதாரத்தில் சுற்றுலா முக்கிய பங்காற்றி வருகிறது. மத்திய பட்ஜெட்டில் அறிவித்தபடி, நாடு முழுவதும் உள்ள 50 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்.

கங்கா விலாஸ் சொகுசு கப்பல் விரைவில் அசாமை வந்தடையும். இந்த கப்பலில் பயணிக்கும் மக்கள், இந்திய கலாசாரம் மற்றும் தாங்கள் செல்லும் இடங்களின் சிறப்பு குறித்து அறிந்து வருகின்றனர். அவர்கள் மூலம், அசாமின் கலாசாரம் உலகம் முழுவதும் அறிய செய்யப்படும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.