சீர்காழி அருகே வாய்க்காலில் கார் கவிழ்ந்த விபத்து- அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்தவர்கள் உயிர் தப்பினர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பல்லாவனம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் தனது தந்தை இறந்த கர்ம காரிய பத்திரிக்கை வைப்பதற்காக தனது காரில் திருமுல்லைவாசல் கிராமத்திற்கு சென்றுள்ளார். பத்திரிக்கை வைத்து விட்டு ரவீந்திரன் சீர்காழி திரும்பியபோது எடமணல் வளைவில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி கொடுப்பதற்காக சாலை ஓரத்தில் சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து ஓரத்தில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதனைக் கண்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து காரின் உள்ளே இருந்த ரவீந்திரனை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பரப்பை ஏற்படுத்தியது.