வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர்: உத்தரகண்ட் மாநிலம் ஜோஷிமத் போன்று ஜம்மு-காஷ்மீரிலும் தோடா மாவட்டத்தில் சில கட்டடங்களில் விரிசல்கள் தென்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலைகளால் சூழப்பட்ட மாநிலமான உத்தரகண்டின் ஜோஷிமத் என்ற இடத்தில் உள்ள சில கட்டடங்களில் கடந்த ஜனவரி மாதம் முதல் விரிசல் ஏற்பட துவங்கின.இரண்டு ஹோட்டல்கள் லேசாக சரிந்த நிலையில் இருந்தன. இதை தொடர்ந்து நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியாக ஜோஷிமத் அறிவிக்கப்பட்டது.மேலும் அந்நகரில் உள்ள கட்டடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புதைந்து வருகிறது.
![]()
|
இதனையடுத்து அப்பகுதியில் வசித்த 4,000 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. அங்குள்ள நிலவரத்தை மத்திய - மாநில அரசுகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.
இந்நிலையில்,ஜம்மு-காஷ்மீரின் மலைப்பகுதியான தோடா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் உள்ள கட்டடங்களில் விரிசல் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட கட்டங்களை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து கணக்கெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.