வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே மேலையூரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட பூம்புகார் கல்லூரி பேராசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலியான தகவல்களை கொடுத்து, முறைகேடாக முதல்வர் பதவியைப் பெற்ற கல்லூரி முதல்வரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஆசிரியர், மாணவர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் கல்லூரி முதல்வரை பணி நீக்கம் செய்ய வேண்டும். பூம்புகார் கல்லூரி ஆசிரியர்களின் பணி மேம்பாடு கோப்புகளை உடனடியாக தாமதமின்றி தஞ்சாவூர் இணை இயக்குனருக்கு ஒப்புதலுக்காக அனுப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் சார்பில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.