காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சிறுகாவேரிபாக்கம் வேளாண் உதவி இயக்குனர் கூட்ட அரங்கில், நேற்று நீர் மேலாண்மை பயிற்சி நடந்தது. வேளாண் விற்பனை துணை இயக்குனர் முகமது ரபிக் தலைமை வகித்தார்.
மாநில நீர் வள ஆதார மேலாண் முகமை உதவி இயக்குனர் சுமதி முன்னிலை வகித்தார்.
குறைந்த நீரை பயன்படுத்தி, அதிக நிலப்பரப்பில் நெல் மற்றும் காய்கறி பயிர்களை சாகுபடி செய்வது மற்றும் தண்ணீரை சேமிக்கும் முறைகள் குறித்து, சென்னை தரமணி வேளாண் உதவி இயக்குனர் சுமதி பேசினார்.
விவசாயிகள் விளைவித்த விளை பொருட்களை எவ்வாறு சந்தைப்படுத்துவது என, வேளாண் விற்பனை துணை இயக்குனர் முகமதுரபிக் பேசினார்.
இதில், வேளாண் விற்பனை துறை உதவி வேளாண் அலுவலர்கள் மற்றும், 25 விவசாயிகள் பங்கேற்றனர்.