புத்தாண்டு துவங்கிவிட்டால் உடனே ஆர்வம் பொங்க ஜிம்மில் போய் சேருவது பலரது செயல். ஆனால் ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ கழித்து கை, கால் வலி, தசை பிடிப்பு காரணமாக பணம் போனாலும் பரவாயில்லை என்று ஜிம்மில் இருந்து நின்றுவிடுபவர்களே அதிகம். பல மாதங்கள் ஜிம் பயிற்சி செய்துவிட்டு திடீரென நின்றுவிட்டால் உடலுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என பலர் தவறாக நினைக்கின்றனர். ஆனால் ஜிம் பயிற்சியை திடீரென கைவிடுவதால் உடலுக்கு சில பாதிப்புகள் ஏற்படும் என்பதே உண்மை. ஜிம் பயிற்சியை திடீரென கைவிட்டால் ஏற்படும் உடல் உபாதைகள் குறித்து தெரிந்துகொள்வோமா?
சில மாதங்கள் ஜிம் சென்றதும் உங்களது தசைகள் சற்று இறுகி வலுவாகும். திடீரென நீங்கள் ஜிம் பயிற்சியை கைவிட்டுவிட்டால் தசை வலி ஏற்படலாம். மேலும் இறுக்கமான தசைகள் படிப்படியாக தளர்ந்து வலுவிழக்கும்.
ஜிம் பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது உங்கள் உடலில் இருந்து அதிகளவு வியர்வை வெளியேறும். பயிற்சியை திடீரென நிறுத்திவிட்டால் வியர்வை வெளியேற்றம் குறையும்.
![]()
|
நீங்கள் சாப்பிடும் கொழுப்பு உணவுகள் அடிவயிறு, தொடைத் தசைகளின் கீழ் கொழுப்பை சேகரிக்கும். இதனால் நாளடைவில் தொப்பை ஏற்படலாம்.
ஜிம் பயிற்சியில் ஈடுபடும்போது அதிகளவு எண்டோர்ஃபைன், செராடினான், டோபோமைன் ஹார்மோன்கள் சுரக்கும். இதனால் உங்களது நாள் புத்துணர்ச்சியுடன் துவங்கும். திடீரென ஜிம் பயிற்சி நின்றால் உங்கள் மன மகிழ்ச்சி அளவு குறையும்.
அதிக வேலை இன்றி இருந்த தசைகளுக்கு ஜிம்முக்கு செல்லும்போது வேலைபளு அதிகரிக்கும். சில மாதங்களில் பயிற்சியை நிறுத்திவிட்டால் தசைகளுக்கு மீண்டும் வேலை குறையும். இதனால் தசைகள் பாதிக்கப்படும்.
![]()
|
சிலருக்கு ஜிம் பயிற்சியை கைவிட்டால் உடல் எடை திடீரென அதிகரிக்கும். நடன கலைஞர்கள் சிலருக்கு இதுபோன்ற பிரச்னை காரணமாக நிரந்தரமாக உடல் பருமன் அடையும். ஹார்மோன் சுரப்பு அளவு மாறுபாடே இதற்கு முக்கியக் காரணம்.