வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா:சாரதா நிதி நிறுவன குழுமத்தின் ரூ. பல்லாயிரம் கோடி மோசடி வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் இயங்கி வந்த சாரதா நிதி நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ரூ. பல ஆயிரம் மோசடி செய்ததாகப் புகார் கூறப்பட்டது. 2013-ம் ஆண்டு இதன் நிறுவனத் தலைவர் சுதிப்தா சென் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்த பின்னர், இவ்வழக்கினை சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குபதிந்து விசாரணை நடத்தி சாரதா நிதி நிறுவனத்தின் ரூ. 600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
![]()
|
இந்நிலையில், இந்த வழக்கில் நடந்த பண மோசடியில் நளினி சிதம்பரம், முன்னாள் எம்.எல்.ஏ., திபேந்திரா பிஸ்வாஸ், முன்னாள் அசாம் எம்.எல்.ஏ., அஞ்சன் தத்தா ஆகியோருக்கு தொடர்பிருப்பதை அமலாக்கத்துறை உறுதி செய்தது. இன்று (03 ம் தேதி ) நடந்த விசாரணையையடுத்து நளினி சிதம்பரத்தின் ரூ. 3.30 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.