சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

தமிழகத்தின் புண்பட்ட திருஷ்டிதோஷம் இது!

Added : பிப் 03, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒரு அமைச்சர் கல்லால் அடிக்கிறார்; மற்றொருவர் சொல்லால் அடிக்கிறார். வேறொருவர் கையால் தாக்குகிறார்; அடுத்தொருவர் தரக்குறைவாக பேசுகிறார். இவற்றுக்கெல்லாம் சப்பைக் கட்டு கட்டுகிறார் இன்னொரு அமைச்சர். அதாவது, திராவிட மாடல் ஆட்சியில், தி.மு.க.,வினர் தவறு செய்வதும், ரவுடித்தனமாக நடப்பதும்,


முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒரு அமைச்சர் கல்லால் அடிக்கிறார்; மற்றொருவர் சொல்லால் அடிக்கிறார். வேறொருவர் கையால் தாக்குகிறார்; அடுத்தொருவர் தரக்குறைவாக பேசுகிறார். இவற்றுக்கெல்லாம் சப்பைக் கட்டு கட்டுகிறார் இன்னொரு அமைச்சர். அதாவது, திராவிட மாடல் ஆட்சியில், தி.மு.க.,வினர் தவறு செய்வதும், ரவுடித்தனமாக நடப்பதும், அவர்களின் பிறப்புரிமை என்றாகி விட்டது.

நாம் என்ன வேண்டுமானாலும் பேசலாம், செய்யலாம்... முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்ள மாட்டார் என்ற தைரியம், இவர்களின் ரத்தத்தில் ஊறியிருப்பது வெள்ளிடைமலை.

தமிழகத்தில் அங்கிங்கெனாதபடி, எங்கும் ரவுடியிசம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. உயர் பதவியில் இருக்கும் கவர்னருக்கோ, மேயருக்கோ சுத்தமாக மரியாதை இல்லை. இதற்கெல்லாம் காரணம், இவர்களிடம் கொட்டிக் கிடக்கும் பணம்; தட்டிக் கேட்காத தலை. பதவிக்காக காய்ந்து போயிருந்த தி.மு.க.,வினர், இன்று வந்த வாழ்வில், தலைகால் தெரியாமல் ஆடுகின்றனர்.

உண்மையிலேயே மக்களுக்கு நல்லதுசெய்ய நினைத்திருந்தால், அமைச்சர்கள் மற்றும் கட்சியினரின் அடாவடிகளை, முதல்வர் ஸ்டாலின் தண்டித்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு, மீட்டிங் போட்டு மாணவர்களுக்கும், மக்களுக்கும், 'இப்படி இரு, அப்படி இரு' என்று உபதேசிப்பது, வேடிக்கையிலும் வேடிக்கை.

அமைச்சர்களும், தி.மு.க.,வினரும், தலைகால் புரியாமல் ஆடிக் கொண்டிருக்கையில், 'தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது' என்று கூறி, கனவுலகில் ஸ்டாலின் வாழ்வதும் வேதனை. ஆயிரம், ரெண்டாயிரம் லஞ்சம் வாங்கும் சாமானியரை உடனடியாக கைது செய்யும் காவல்துறையின் கைகள், தி.மு.க., 'ரவுடி பேபிகள்' மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றன; அதற்கான அதிகாரத்தையும், காவல் துறைக்கு முதல்வர் கொடுக்கவில்லை.

முதல்வர் அவர்களே.... உங்களுக்கு மக்களை பற்றி கவலையில்லை; அவர்களின் எண்ணங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும், மரியாதை கொடுப்பதும் கிடையாது. உங்களை பொறுத்தவரை, ஓட்டுப் போடும் மக்கள், எடை பார்க்கும் இயந்திரங்கள். காசு போட்டால் சீட்டு வருவது போல, நீங்கள் பணம் கொடுத்தால் ஓட்டுப் போடுவர்... அவ்வளவு தான். அந்த மக்களின் வறுமையும், முட்டாள்தனமுமே உங்களின் மூலதனம்... அப்படித்தானே!

தவறுதலாக ஒரு வீட்டின் கதவை தட்டியதற்காக தன் கையையே வெட்டிக் கொண்டான், பொற்கை பாண்டியன்; தடம் புரண்ட ரயிலின் விபத்துக்காக பதவி துறந்தார், லால் பகதூர் சாஸ்திரி. இது, அன்றைய பாரதத்தின் பண்பட்ட வரலாறு; கல்வீச்சும், கன்னா பின்னா பேச்சும் இன்றைய தமிழகத்தின் புண்பட்ட திருஷ்டிதோஷம்.

lll
வீரமணி வரலாற்றை புரட்டி பாருங்க பாலு!எம்.கலைவாணி, அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி மீது, யாராவது கை வைத்தால், அவர்களின் கையை வெட்டுவேன்' என்றும், 'ஹிந்துக்களின் கோவில்களை இடித்து விட்டு, அவர்களின் ஓட்டுகளை பெறும் வித்தை எனக்கு தெரியும்' என்றும், பொதுவெளியில் தெனாவட்டாகப் பேசியிருக்கிறார், தி.மு.க.,வின் பொருளாளரான டி.ஆர்பாலு.

அந்த பாலுவுக்கு, வீரமணியின் வாழ்க்கையில் நடந்த இரு சம்பவங்களை நினைவுபடுத்த வேண்டிய தருணம் இது...

தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர்., பதவி வகித்த காலத்தில், ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதி, எம்.எல்.ஏ.,வாக இருந்தவரும், எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியும், அஞ்சா நெஞ்சன் என்று பெயர் பெற்றவருமான தாமரைக்கனி, தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்தார்.

அந்த சூழ்நிலையில், ௧௯௮௨ ஜூலையில், ஸ்ரீவில்லிபுத்துாரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய வீரமணி, ஆண்டாள் பற்றியும், பிராமணர்கள் பற்றியும், அருவெறுக்கத்தக்க வார்த்தைகளால் விமர்சித்தார்.

உடன் கொதித்தெழுத்த பிராமணர் சமூகத்தினர், எம்.எல்.ஏ.,வாக இருந்த தாமரைக்கனியிடம் முறையிட்டனர்; அவர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார் தாமரைக்கனி. அன்றைய தினம் இரவு ஸ்ரீவில்லிபுத்துார் அருகேயுள்ள வத்திராயிருப்பில், பொதுக்கூட்ட நிகழ்ச்சியை முடித்து விட்டு, வீரமணி திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, தி.க.,வினர் போல, கருப்புச் சட்டை அணிந்து, கருப்பு கொடியேந்தி வந்த, ௫௦ பேர் வீரமணியின் காரை நிறுத்தினர்; அவர்களை தன் கட்சியினர் என நினைத்து, காரிலிருந்து இறங்கி வந்தார் வீரமணி. உடன், ௫௦ பேரும் வீரமணியை அடித்து உதைத்தனர்.

இதேபோல, 2013-ல் பகவான் கிருஷ்ணர் பற்றி அவதுாறாகப் பேசியதற்காக, விருத்தாசலத்தில் யாதவா மகாசபையினர், வீரமணியின் காரை தாக்கினர்.

வீரமணி தாக்கப்பட்ட இந்த இரண்டு இடங்களிலும், பலசாலியான, வாய்ச்சொல் வீரரான டி.ஆர்.பாலு மட்டும் இருந்திருந்தால், ஐந்து பேருடைய கைகளையாவது வெட்டி, சிறை சென்றிருப்பார்.

பாவம்... தன் மீது இவ்வளவு பாசம் கொண்ட டி.ஆர்.பாலுவை அப்போதெல்லாம், வீரமணி உடன் அழைத்துச் செல்லாமல் விட்டு விட்டாரே... இனியாவது, உதை வாங்கும் வகையில், சர்ச்சையாக பேசும் பொதுக்கூட்டங்களுக்கு, டி.ஆர்.பாலுவை, வீரமணி உடன் அழைத்துச் செல்ல வேண்டும். அப்போது தெரியும்... டி.ஆர்.பாலுவின் வீரதீர பராக்கிரமம்.

lll


மதக்கலவர தீ மூட்டாதீங்க!கே.மணிவண்ணன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு, ௨௦௧௪ல், மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது. அதன்பின்,நாட்டில் மத மோதல்கள்அதிகரித்து விட்டன. பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது' என்று பினாத்தியுள்ளார், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி.

கடந்த 2014க்கு பின், நாட்டில் எங்கும் மதக் கலவரங்கள் நிகழவில்லை. ஆனாலும், மத மோதல்கள் அதிகரித்திருப்பதாக உளறுகிறார் இவர்.

கடந்த, 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, அதனால் மதக்கலவரம் நிகழ்ந்த போது, இவர் பாகிஸ்தானில் இருந்திருப்பார் போல தெரிகிறது. அப்போது, மோடியா ஆட்சியில் இருந்தார்... காங்கிரஸ் தானே ஆட்சியில் இருந்தது.

ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த நாட்டில், முஸ்லிம்களுக்கென தனிச் சட்டம் இருக்கிறது. அனைத்து மதத்தினரும், சமமாக நடத்தப்படுகின்றனர். மோடி பதவியேற்ற பின், நாட்டில் அமைதி நிலவுகிறது.

எந்த நாட்டிலும் இல்லாத சுதந்திரம், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு உள்ளது. இதை பெரும்பாலான முஸ்லிம்கள் உணர்ந்திருப்பதால் தான், ௨௦௨௨ல் நடந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், பா.ஜ.,வுக்கு ஓட்டளித்தவர்களின் எண்ணிக்கையும், சதவீதமும் அதிகரித்துள்ளது.

எனவே, மதக் கலவரம் என்ற தீ மூட்டி, அதில், குளிர்காய நினைக்காதீங்க மெஹபூபா!

lll


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

Anantharaman Srinivasan - chennai,இந்தியா
04-பிப்-202322:52:51 IST Report Abuse
Anantharaman Srinivasan Totally can't his controll on senior party mens because they are seniors to him.
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
04-பிப்-202322:44:26 IST Report Abuse
Anantharaman Srinivasan பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வீரமணிக்கு தன்னை பாதுகாத்துக்கொள்ளும் வீரமும் தைரியமும் இருந்தது. இப்போ வயசாகி போச்சு. எனவே தான் TR பாலு என்ற இளையர் தேவைப்படுகிறார்..
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
04-பிப்-202317:35:51 IST Report Abuse
Dharmavaan மைனாரிட்டி சலுகைகள் முழுதும் நிறுத்தப்பட வேண்டும் எப்போது தோன்றும் என்று தெரியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X