வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: 2021-ம் ஆண்டு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், வின்ட்சர் கேசில் அரண்மனையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது, ஜஸ்வந்த்சிங் என்ற 19 வயது வாலிபர் ஒருவர் அரண்மனைக்குள் நுழைய முயன்றதாக கைது செய்யப்பட்டார்.
அவரிடம், கிராஸ் பவ் எனப்படும் துாண்டிலுடன் இணைந்த வில் மற்றும் அம்பு இருந்தது. 1919ல் பஞ்சாபின் அமிர்தசரசில் உள்ள ஜாலியன்வாலா பாகில், சுதந்திரம் கேட்டு போராடியவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் வகையில், பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தை கொலை செய்ய உள்ளேன் என வீடியோவும் வெளியிட்டான்.
கைதான இளைஞன் மன நலம் பாதிக்கப்பட்டவனா என போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கோர்ட்டில் நடந்த விசாரணையில் பிரிட்டன் ராணியை கொல்ல முயற்சித்த வழக்கில் அவர் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார்.