அமிர்தசரஸ் பாகிஸ்தானில் இருந்து, நம் எல்லைக்குள் போதைப்பொருளுடன் நுழைந்த 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா விமானத்தை, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
பஞ்சாபின் அமிர்தசரசில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியான கக்காரில், நம் பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அண்டை நாடான பாக்., பகுதியில் இருந்து நம் எல்லைக்குள் பறந்து வந்த ட்ரோனை, பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
பின் அதை சோதனையிட்டதில், 3 கிலோ எடையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான 'ஹெராயின்' போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர்.