பாலக்காடு. கேரளாவில், 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளிக்கு 41 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள தச்ச நாட்டுகரையைச் சேர்ந்தவர் ஹம்சா, 51.
மதரசா எனப்படும் இஸ்லாமிய கல்வி போதிக்கும் பள்ளியின் ஆசிரியரான இவர், கடந்த ஆண்டு, 10 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கு நேற்று விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது குற்றவாளிக்கு, 41 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சதீஷ்குமார் தீர்ப்பளித்தார்.