வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சென்னை : ஒரு நிமிடத்திற்கு 25 ஆயிரம் ரயில் டிக்கெட்டுகள் வழங்குவதை இனி வரும் காலங்களில் இரண்டேகால் லட்சமாக உயர்த்தி வழங்கிட திறன் மேம்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு, 6,080 கோடி ரூபாய் நிதி
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட்டில், ரயில்வே துறைக்கு மண்டலங்கள் வாரியாக ஒதுக்கியுள்ள தொகை மற்றும் திட்டப் பணிகள் குறித்து, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், புது டில்லியில் இருந்து, அனைத்து ரயில்வே மண்டல மேலாளர்கள், பத்திரிகையாளர்களிடம் நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசினார்.
அவர் பேசியதாவது:
மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு மொத்தம், 2.4 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. வந்தே பாரத் ரயில் தயாரிப்பு வெற்றிகரமாக நடந்து வருகிறது. சேவை துவங்கப்பட்டுள்ள, ஒன்பது வந்தே பாரத் ரயில் சேவைகளுக்கு, பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
![]()
|
அடுத்தகட்டமாக, வந்தே மெட்ரோ ரயில் தயாரிக்க திட்டமிட்டு உள்ளோம். அதன்படி, 100 கி.மீ., வரை உள்ள இருநகரங்களை இணைக்கும் வகையில், இந்த வந்தே மெட்ரோ ரயில் சேவை இருக்கும். அதுபோல், நாடு முழுதும், 85 சதவீத வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன.
இதுதவிர, பசுமை எரிசக்திக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், ஹைட்ரஜன் வாயிலாக இயங்கும் ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் டிசம்பரில் நிறைவடையும்.
இந்த பட்ஜெட்டில், தெற்கு ரயில்வேக்கு மொத்தம், 11 ஆயிரத்து, 313 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதில், தமிழகத்திற்கு மட்டும், 6,080 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுதும், 1,000 ரயில் நிலையங்களில், தினசரி பொருட்களை வாங்கும் வகையில், பல்பொருள் அங்காடிகளை அமைக்க உள்ளது.
இதில், தமிழகம், கேரளாவில் அதிகம் இடம் பெறும். ரயில்வே திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த, மாநில அரசுகளின் ஒத்துழைப்பு அவசியம்.
முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில், ரயில்பாதை மேம்பாடு, சிக்னல் தொழில்நுட்பம் மேம்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இந்த நிதி ஆண்டில், 250 ரயில்களுக்கான பெட்டிகளும், அடுத்த நிதி ஆண்டில், 320 ரயில்களுக்கான பழைய பெட்டிகளும் நீக்கப்பட்டு, புது பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்.
அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை, அனைத்து பழைய ரயில் பெட்டிகளும் நீக்கப்பட்டு, புது பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். ஒரு நிமிடத்திற்கு 25 ஆயிரம் ரயில் டிக்கெட்டுகள் வழங்குவதை இரண்டேகால் லட்சமாக உயர்த்தி வழங்கிட திறன் மேம்பாடு செய்ய
இவ்வாறு, அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசினார்.
இந்த நிகழ்வின்போது, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், முதன்மை தலைமை இயக்க மேலாளர் நீனு இட்டேரா, தெற்கு ரயில்வே பொது மேலாளரின் செயலர் செந்தமிழ்செல்வன், சென்னை ரயில்கோட்ட மேலாளர் கணேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.
'
Advertisement