'ஹிண்டன்பர்க்' நிறுவனத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Updated : பிப் 04, 2023 | Added : பிப் 04, 2023 | கருத்துகள் (22) | |
Advertisement
புதுடில்லி : அதானி குழுமத்தின் பங்கு மதிப்பை சீர்குலைத்து, அதன் வாயிலாக லாபம் அடைந்ததாக, 'ஹிண்டன்பர்க் ரிசர்ச்' நிறுவனத்தின் நிறுவனர் நேதன் ஆண்டர்சன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீட்டு ஆய்வு நிறுவனம், அதானி குழுமங்கள் பங்குச் சந்தையில் மோசடி செய்ததாக
Aadani, Hindenburg, Supreme Court, அதானி, ஹிண்டன்பர்க், நேதன் ஆண்டர்சன், உச்ச நீதிமன்றம், Nathan Anderson,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_upபுதுடில்லி : அதானி குழுமத்தின் பங்கு மதிப்பை சீர்குலைத்து, அதன் வாயிலாக லாபம் அடைந்ததாக, 'ஹிண்டன்பர்க் ரிசர்ச்' நிறுவனத்தின் நிறுவனர் நேதன் ஆண்டர்சன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீட்டு ஆய்வு நிறுவனம், அதானி குழுமங்கள் பங்குச் சந்தையில் மோசடி செய்ததாக சமீபத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டது.

இது, நாடு முழுதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கிளப்பி, பார்லிமென்டை இரண்டு நாட்களாக முடக்கிஉள்ளன.

இந்நிலையில், எம்.எல்.சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:

ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் நிறுவனர் நேதன் ஆண்டர்சனும், அவரைச் சேர்ந்தவர்களும், 'ஷார்ட் செல்லிங்' எனும் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்.


latest tamil news


இவர்கள், அதானி குழுமத்தின் பங்கு மதிப்பை செயற்கையாக சீர்குலைத்து, அதன் வாயிலாக அதிக லாபம் அடைந்துள்ளனர்.

இதை இவர்கள் உள்நோக்கத்துடன் செய்துள்ளனர். இதன் வாயிலாக, அப்பாவி முதலீட்டாளர்களையும், இந்திய பங்குச் சந்தையையும் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர்.

இதற்காகவே இவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு, அதானி குழுமத்துக்கு எதிரான அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இதை செய்துள்ள நேதன் ஆண்டர்சன் மீது, மோசடி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நிறுவனத்தின் பங்கு விலை குறையும் என முன்கூட்டியே யூகித்து, அந்த பங்குகளை அதிகமாக வாங்கி விற்பனை செய்வர்.

பின், அந்த பங்கின் விலை குறைந்ததும், குறைந்த விலைக்கு அந்த பங்குகளை வாங்கி பரிவர்த்தனையை நேராக்கி, குறைந்த காலத்தில் அதிக லாபம் சம்பாதிப்பர். பங்குச் சந்தையின் இந்த நடவடிக்கைக்கு, 'ஷார்ட் செல்லிங்' என பெயர்.

நேதன் ஆண்டர்சனும், அவரைச் சேர்ந்தவர்களும் இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், அதிகமாக லாபம் சம்பாதிப்பதற்காக முன்கூட்டியே சதி செய்து, இதற்காகவே அதானி குழுமத்துக்கு எதிரான அறிக்கையை ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளதாக, பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (22)

Vetha - NAGERCOIL,இந்தியா
05-பிப்-202319:37:57 IST Report Abuse
Vetha 2014 இல் அதானி உலகத்தில் 638 வது ...பணக்காரர்... ஆனால் 2023ல் உலகின் 3வது செல்வந்தர்.... இதை பழைய பேப்பர் படித்தால் எல்லாரும் தெரிந்து கொள்ளலாம்.... உலக அதிசயம் நடந்தால் மட்டும் தான் இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கும்... மீதி போது மக்கள் புரியட்டும்
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
04-பிப்-202317:40:53 IST Report Abuse
Suppan முதலீட்டாளர்கள் (சிறு முதலீடு செய்பவர்கள் உட்பட) இல்லாவிடில் அரசே எல்லாத் தொழில்களையும் ஏற்று நடத்த வேண்டும் . அந்த அளவு பணம் எங்கிருந்து கிடைக்கும்?. வரிகள் மூலம் என்றால் ஒவ்வொருவரும் எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா? அரசு நிறுவனங்களின் நிர்வாக லட்சணம் எல்லோருக்கும் தெரியும்.
Rate this:
Cancel
Aanmeega Kaavi Sangar Nadar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
04-பிப்-202314:43:36 IST Report Abuse
Aanmeega Kaavi Sangar Nadar அதானி பங்கு சந்தையில் இதுதான் முதலீடு செய்ய நல்ல தருணம். இப்ப பங்குகள் வாங்கினால் இன்னும் இரண்டு வருடங்களில் நல்ல லாபம் பெறலாம்.
Rate this:
maharaja - திருநெல்வேலி,இந்தியா
05-பிப்-202318:03:15 IST Report Abuse
maharajaமுதலில் செய்யுங்க அப்படியே சங்கிகள் செஞ்சிட்டாலும் உங்களுக்கு ஒரு % கூட எந்த பற்றும் கிடையாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X