ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கூட்டத்திற்கு அனுமதிக்க வழக்கு

Updated : பிப் 04, 2023 | Added : பிப் 04, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
மதுரை: துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக கருத்தரங்கு நடத்த அனுமதி கோரிய வழக்கில், எஸ்.பி., பரிசீலிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.துாத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத் தலைவர் தியாகராஜன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை, 2018ல் மூடப்பட்டது. இதனால் பலர் வேலை
Thoothukudi, Sterlite, Madurai High Court, தூத்துக்குடி, ஸ்டெர்லைட், மதுரை உயர் நீதிமன்றம், தியாகராஜன், Thiagarajan,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



மதுரை: துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக கருத்தரங்கு நடத்த அனுமதி கோரிய வழக்கில், எஸ்.பி., பரிசீலிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

துாத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத் தலைவர் தியாகராஜன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை, 2018ல் மூடப்பட்டது. இதனால் பலர் வேலை வாய்ப்பை இழந்தனர்; வாழ்வாதாரம் பாதித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையின் பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதி மூலம் விவசாயிகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மகளிர் சுய உதவி குழுவினருக்கு உதவிகள் செய்யப்பட்டன; மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.


latest tamil news


இறை பணியிலும் ஆலை நிர்வாகம் கவனம் செலுத்தியது. தற்போது அப்பணிகள் நடைபெறவில்லை. தவறான பிரசாரம் மூலம் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்ததால் ஆலை மூடப்பட்டது.

ஆலையை திறக்க, தற்போது தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், அரசை வலியுறுத்தியுள்ளனர்.

ஆலை பற்றிய அறிவியல் பூர்வ உண்மையை மக்களுக்கு தெளிவுபடுத்த, கருத்தரங்கு நடத்த அனுமதி கோரி, துாத்துக்குடி 'சிப்காட்' போலீசாரிடம் மனு அளித்தோம்; நிராகரிக்கப்பட்டது. அதை ரத்து செய்து, அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.முரளிசங்கர், ''துாத்துக்குடி எஸ்.பி.,யிடம் மனுதாரர் புதிதாக மனு அளிக்க வேண்டும். அதை பரிசீலித்து தேவையெனில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்,'' என உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

Suppan - Mumbai,இந்தியா
04-பிப்-202317:28:38 IST Report Abuse
Suppan சபரீசனோ ஜகத்ரக்ஷ்கனோ வேறு டீம்க ஆசாமியோ ஆலையை எடுத்து நடத்த முன்வந்தால் அரசு உடனே பரிசீலித்து அனுமதி வழங்கும். சுற்றுச் சூழல் "ஆர்வலர்கள்" , என்று சொல்லிக் கொள்பவர்கள் பனிமயமாதாக்கள் தங்களுக்கு உரிய வாய்க்கரிசியை வாங்கி கொண்டு வாய்மூடி மவுனம் காப்பர்.
Rate this:
Cancel
04-பிப்-202310:35:14 IST Report Abuse
ஆரூர் ரங் கூட்டத்திற்கு வேட்டு வைக்கும் வரை தென் மாவட்டம் எதுவும் முன்னேற வாய்ப்பில்லை.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
04-பிப்-202307:31:33 IST Report Abuse
GMM தாமிர ஆலை போன்ற மூடிய ஆலைகளை ஆளும் திமுக முன்னிருந்து திறக்க ஆவன செய்ய வேண்டும். பொருட்கள் பழுதடையும் முன் முடிவு செய்ய வேண்டும். மதுக்கடைகள் முட வேண்டிய நிலை ஏற்படும். பல தொழில் நிறுவனங்கள் இடம் பெயர்ந்து விட்டன. தேவைக்கு அதிகமாக தொழில் சாராத கல்லூரிகள் உள்ளன. வருவாய் குறையும் முன் முடிவு எடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X