வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சென்னை : ''பா.ஜ., மட்டுமே, தமிழக நலனில் அதிக அக்கறை கொண்டு செயல்படுகிறது,'' என, அக்கட்சியின் தேசிய பொது செயலர் வினோத் தவ்டே தெரிவித்தார்.
தமிழக பா.ஜ.,வின் சிந்தனையாளர் பிரிவு, வழக்கறிஞர் பிரிவு, தொழில் பிரிவு சார்பில், முக்கிய பிரமுகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் நேற்று நடந்தது.
பா.ஜ., தேசிய பொதுச் செயலர் வினோத் தவ்டே, மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் அண்ணாமலை, மாநில துணை தலைவர்கள் நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ், சிந்தனையாளர் பிரிவு தலைவர் ஷெல்வி தாமோதரன், தொழில் பிரிவு தலைவர் கோவர்தன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
![]()
|
நிகழ்ச்சியில், வினோத் தவ்டே பேசியதாவது:
பா.ஜ., தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. தேசிய கல்வி கொள்கை சிறப்பாக உள்ளது. பா.ஜ., மட்டுமே தமிழக நலனில் அதிக அக்கறையுடன் செயல்படுகிறது. தமிழகத்தில், அண்ணாமலை தலைமையில், பா.ஜ., சிறப்பாக வளர்ந்து வருகிறது. மத்தியில் ஊழலற்ற ஆட்சியை பா.ஜ., வழங்குகிறது.
மத்திய அரசு, தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறது. அதை ,தமிழக அரசு முறையாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அண்ணாமலை பேசியதாவது:
மத்திய பா.ஜ., அரசு, இளைஞர் நலனில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதனால் தான் பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் மதுவின் கொடுமை அதிகம் உள்ளது. இதை தடுக்க வேண்டும். தி.மு.க., ஆட்சியில் அதிக ஊழல் நடக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement