திருவனந்தபுரம்: கேரள சட்டசபை கூட்டத்தில், நேற்று(பிப்.,03) 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை முதல்வர் பினராயி விஜயன் முன்னிலையில், நிதி அமைச்சர் கே.என். பாலகோபால் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில், ரூ.3 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் வகையில் புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது.
* ஆயிரத்திற்கும் மேல் விற்கப்படும் மது பாட்டிலுக்கு ரூ.40 உயர்த்தப்படும் என அறிவிக்கப்படுள்ளது. மேலும் பெட்ரோல், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.2 வீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல், மது விலை உயர்கிறது. மோட்டார் சைக்கிள்களுக்கான வரியும் 2 சதவீதம் உயர்த்தப்பட்டுகிறது.