சென்னை : ''வரும், 2025ம் ஆண்டுக்குள், தொழுநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்குவது நம் இலக்கு,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தேசிய தொழு நோய் தினத்தையொட்டி, சென்னை ராணிமேரி கல்லுாரியில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று நடத்தப்பட்டன.
நிகழ்ச்சியில், அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:
மத்திய அரசு, 2027ம் ஆண்டுக்குள் தொழு நோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவதை இலக்காக கொண்டுள்ளது. அதற்கு முன், 2025க்குள் தொழு நோய் இல்லாத தமிழகத்தை உருவாக்க, மாநில அரசு செயலாற்றி வருகிறது.
![]()
|
அதற்கு, அரசு மட்டும் உழைத்தால் போதாது; மாணவ, மாணவியரின் ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் தேவை. தொழு நோயாளிகளின் ஊனம் பாதிப்பு நிலை, 90 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தொழு நோயால் பாதிக்கப்பட்டுள்ள, 9,356 பேர் மாதாந்திர உதவி தொகையை பெறுகின்றனர். தற்போது மருத்துவமனையில், 2,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.