ஈரோடு: கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், ஈரோடு மாநகர் மக்கள் மேம்பாட்டு சங்கத்தினர், 108 பேரை களமிறக்கலாம் என்பதால், அரசியல் கட்சியினர் பீதி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாநகர மக்கள் மேம்பாட்டு சங்கத்தின் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், 80 அடி திட்ட சாலையை திறக்க வேண்டும். 12.66 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 108 பேரை வேட்பாளராக களமிறக்க முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பிரதான அரசியல் கட்சிகளை, ஆட்டம் காண செய்தது. அதேசமயம் அறிவித்த சங்கத்தினர் சார்பில், நேற்று வரை வேட்புமனு தாக்கலுக்கான விண்ணப்பம் கூட பெற்றுச்செல்லவில்லை.
இதுகுறித்து சங்கத்தினர் கூறியதாவது: இரு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் பிரச்னை குறித்து பேசினர். நாளை (இன்று) வரவிருப்பதாக தெரிவித்தனர். யாரும் வராவிட்டால், இறுதி நாளான, 7ம் தேதி மனு தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.