வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: இரண்டாவது சீன உளவு பலூன் லத்தீன் அமெரிக்காவின் மேல் பறந்துள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனின் மோண்டானா என்ற அணுசக்தி ஏவுதளத்தின் மீது கடந்த சில நாட்களுக்கு முன் வெள்ளை நிற பலூன் பறந்துள்ளதை அமெரிக்க ராணுவம் கண்காணித்து அது சீனா உளவு பலூன் தான் என்பதை உறுதி செய்துள்ளது. தகவல்களை சேகரிப்பதற்காக வந்ததுள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதி அந்த பலுனை நாங்கள் சுடவில்லை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கன் , அரசு முறைப்பயணமாக சீனா செல்ல திட்டமிட்டிருந்தார். தற்போது சீன பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இரண்டாவது சீன உளவு பலூன் இன்று (பிப்.,04) லத்தீன் அமெரிக்காவின் மேல் பறந்துள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக செயற்கைக்கோள்கள் மூலம் இவ்வாறு உளவுப்பணிகள் நடக்கும். ஆனால் தற்போது பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு பலூன்கள் கொண்டு உளவு பார்க்கப்படுகிறது என பென்டகன் கூறியுள்ளது.