புதுடில்லி: நாட்டில் வங்கிகளின் நிலை சீராகவும், மீண்டெழும் தன்மையுடனும் உள்ளது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகளில் பெரும் மோசடி செய்திருப்பதாக அதானி நிறுவனத்தின் மீது, 'ஹிண்டன்பர்க்' என்ற அமெரிக்க நிறுவனம் குற்றஞ்சாட்டியது பெரும் விவகாரமாக வெடித்துஉள்ளது. இதனை தொடர்ந்து அதானி குழுமத்திற்கு வழங்கிய கடன்கள் குறித்து விரிவான அறிக்கை அளிக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

அதானி குழுமத்திற்கு இந்திய வங்கிகள் ரூ.80 ஆயிரம் கோடி கடன் வழங்கி உள்ளன. இது, அந்த குழுமத்தின் மொத்த கடனில் 38 சதவீதம் ஆகும். அதிகமாக எஸ்பிஐ 21 ஆயிரம் கோடி ரூபாய், பஞ்சாப் நேஷனல் வங்கி 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளன தனியார் வங்கிகளும் கடன் வழங்கி உள்ளன.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: '' முதலீடு வளம், சொத்துகளின் தரம், லிக்விடிட்டி லாபம் எனப் பல்வேறு வரையறைகளிலும் இந்திய வங்கிகளின் நிலை சீராகவும், மீண்டெழும் தன்மையுடனும் ஸ்திரமாக உள்ளது.
இந்திய வங்கிகளின் செயல்பாட்டை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது. தற்போதைய ஆய்வின்படி வங்கித்துறைக்கு எந்த பாதிப்பும் இல்லை''. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்த அறிக்கையில் அதானி குழுமத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
Advertisement