வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
ஸ்ரீநகர்: காங்கிரஸ் ஆட்சி காலத்தை விட, பாஜ., ஆட்சி காலத்தில் இந்தாண்டு காஷ்மீருக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
1,500 விளையாட்டு வீரர்கள்:
கேலோ இந்தியாவின் விளையாட்டுகள் வரும் பிப்.,10 முதல் பிப்., 14ம் தேதி வரை ஜம்மு காஷ்மீரின் குல்பர்கில் நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் இருந்து 1,500 விளையாட்டு வீரர்கள் இந்த போட்டியில் 9 பிரிவுகளில் விளையாடுகின்றனர்.

மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறையின் ஆதரவுடன் ஜம்மு கஷ்மீர் விளையாட்டு கவுன்சில் மற்றும் குளிர்கால விளையாட்டு சங்கம் சார்பில் 3 ஆவது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு நடத்தப்படுகிறது.
பங்கேற்பு:
இதனை முன்னிட்டு 3வது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டின் சின்னம், சீருடை (ஜெர்சி) அறிமுக விழா இன்று(பிப்.,04) ஜம்முவில் உள்ள துணை நிலை கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டார்.
பின் அவர் அளித்த பேட்டி: 2023 ~ 24ம் ஆண்டு பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 2.40 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2013 ~ 14ஐ ஒப்பிட்டுப் பார்த்தால் 9 மடங்கு அதிகம்.
2009 ~ 2014ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஜம்மு காஷ்மீருக்கு வெறும் 1044 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கியது. ஆனால் இந்தாண்டு பட்ஜெட்டில் பா.ஜ., 6003 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இது 6 மடங்கு அதிகம்.

அம்ரித் காலின் முதல் பட்ஜெட்டில், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான முழுமையான தீர்மானத்திற்கு அடித்தளமிட்டது. இந்தாண்டு பட்ஜெட் கிராமங்கள், ஏழைகள், பெண்கள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கம், இளைஞர்கள், விவசாயிகள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருகும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement