சென்னை: ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து, ஒப்புதல் படிவத்தை அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு அளிக்க படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வெளியிட்ட அறிக்கையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழு உறுபினர்கள் சுற்றறிக்கை மூலம் தேர்வு செய்வதற்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
அதன்படி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் சுற்றறிக்கையை முறையாக பூர்த்து செய்து, நாளை இரவு 7 மணிக்குள் அதிமுக தலைமை அலுவலகத்தில் என்னிடம் சேர்ந்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.