பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்

Updated : பிப் 22, 2023 | Added : பிப் 04, 2023 | கருத்துகள் (18) | |
Advertisement
சென்னை : பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் 78 சென்னையில் காலமானார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த அவர் வீட்டில் வழுக்கி வழுந்ததில் அவர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நுங்கம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் வாணி ஜெயராம். "வீட்டுக்கு வந்த
Vanijayaram, RIPVanijayaram, வாணிஜெயராம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் 78 சென்னையில் காலமானார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த அவர் வீட்டில் வழுக்கி வழுந்ததில் அவர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நுங்கம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் வாணி ஜெயராம். "வீட்டுக்கு வந்த மருமகள்" என்ற படத்தில் பாடகர் டி எம் சௌந்தர்ராஜனோடு இவர் சேர்ந்து பாடிய ஜோடிப்பாடலான 'ஓரிடம் உன்னிடம் நான் கேட்பது' என்ற பாடலே இவர் பாடி தமிழில் வெளிவந்த முதல் திரைப்பட பாடல். 'மல்லிகை என் மன்னன் மயங்கும்', 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்' உள்ளிட்ட ஏராளமான ஹிட் பாடல்களை இவர் பாடி உள்ளார்.


latest tamil news



தமிழில் எம்எஸ் விஸ்வநாதன் துவங்கி ஏஆர் ரஹ்மான் வரை பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் இவர் பாடி உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஒரியா, குஜராத்தி மற்றும் பெங்காளி என அனைத்து மொழிகளிலும் 10,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். ஏராளமான பக்திப் பாடல்களும் தனி ஆல்பங்களாக இவரது குரலில் வெளிவந்திருக்கின்றன.

கடந்தவாரம் தான் மத்திய அரசு இவரின் கலைச்சேவையை பாராட்டி பத்மபூஷண் விருது வழங்குவதாக அறிவித்தது. ஆனால் அந்த விருதை பெறும் முன்பே அவர் மறைந்தது திரையுலக ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


சந்தேக மரணம்

வாணி ஜெயராம் மரணத்தை ஆயிரம் விளக்கு போலீஸ் ஸ்டேசனில் ஐபிசி174வது பிரிவின் கீழ் சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



இவரது மறைவுக்கு இசைகலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

Gopi -  ( Posted via: Dinamalar Android App )
05-பிப்-202307:04:35 IST Report Abuse
Gopi இவருடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் துல்லியமாக இருக்கும், குரலால் நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்....
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
04-பிப்-202322:02:35 IST Report Abuse
THINAKAREN KARAMANI 'மல்லிகை என் மன்னன் மயங்கும்' என்ற தேன் குரல் பாடல் மூலம் உலக மக்களை மயக்கியவர் மரண தேவதையை தன்... இன்குரலால் மயக்க இவ்வுலகை விட்டு சென்றுவிட்டார். அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
Rajah - Colombo,இலங்கை
04-பிப்-202322:00:13 IST Report Abuse
Rajah ஆழ்ந்த அனுதாபங்கள் ...RIP
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X