புற்றுநோய் சிகிச்சையில் இடைவெளியை குறைப்போம்

Added : பிப் 04, 2023 | |
Advertisement
தமிழகத்தில் வாய், மார்பகம், கர்ப்பப்பை வாய், நுரையீரல், வயிறு, பெருங்குடல் புற்றுநோய் அதிகமாக உள்ளது. இந்தியாவில் மூன்றில் 2 வகை புற்றுநோய் புகையிலை தொடர்பானவை.15 சதவீதத்திற்கும் குறைவான புற்றுநோய் பரம்பரையாக வருகிறது. பெரும்பாலானவை வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களால் வருகிறது. புகைப் பிடிப்பதை தவிர கணையம், கல்லீரல் புற்றுநோய்களுக்கு குடிப்பழக்கமும் ஒரு

தமிழகத்தில் வாய், மார்பகம், கர்ப்பப்பை வாய், நுரையீரல், வயிறு, பெருங்குடல் புற்றுநோய் அதிகமாக உள்ளது. இந்தியாவில் மூன்றில் 2 வகை புற்றுநோய் புகையிலை தொடர்பானவை.

15 சதவீதத்திற்கும் குறைவான புற்றுநோய் பரம்பரையாக வருகிறது. பெரும்பாலானவை வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களால் வருகிறது. புகைப் பிடிப்பதை தவிர கணையம், கல்லீரல் புற்றுநோய்களுக்கு குடிப்பழக்கமும் ஒரு காரணம். இந்தியாவில் பல புற்றுநோய்களுக்கான சராசரி வயது மேலை நாடுகளை விட மிக குறைவாக உள்ளது. 70 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகள் 30 முதல் 69 வயதில் ஏற்படுகிறது.

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிலவகை நோய்களுக்கு ஏ.ஆர்.சி., சிகிச்சை, டோமோதெரபி போன்ற பக்கவிளைவு இல்லாமல் துல்லியமான கதிர்வீச்சை வழங்கும் சிறப்பு கதிர்வீச்சு நுட்பங்கள் தேவைப்படுகிறது.

உறுப்புகளை பாதுகாத்தல், ரோபோடிக் அறுவை சிகிச்சை மற்றும் மார்பக புற்று நோயாளிகளுக்கு காஸ்மெடிக்ஸ் மூலம் சிகிச்சை வழங்கப்படுகிறது. 2014 முதல் பல்வேறு ரத்தநோய், கட்டிகள் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

புற்று நோய்க்கான அறி குறியில்லாமல் சாதாரணமாக, குறைந்த செலவில் முன்பரிசோதனை செய்யும் வசதி உள்ளது. 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேமோகிராம், வாய் பரிசோதனை (புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு), பாப்ஸ்மியர் பரிசோதனை செய்யப்படும். உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது, அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது, கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பதன் மூலம் புற்றுநோய்க்கான ஆபத்தை குறைக்க முடியும்.

-- டாக்டர் கிருஷ்ணகுமார் ரத்னம் மதுரை 0452 - 426 3000

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X