மதுரை தேவகி சிறப்பு மருத்துவமனையில் உலகத்தரம் வாய்ந்த நவீன புற்று நோய்க்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 2006 ல் தேவகி புற்றுநோய் சிகிச்சை பிரிவை துவக்கி வைத்தார். தென் தமிழகத்தில் 17 ஆண்டுகளுக்கு முன்பே அதிநவீன 'லீனியர் ஆக்ஸிலரேட்டர்' எனப்படும் புற்றுநோய் கதிர்வீச்சு கருவி மூலம் துல்லியமான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான அறுவை சிகிச்சை பிரிவு, கீமோதெரபி என்னும் மருத்துவ சிகிச்சை பிரிவு, கதிர்வீச்சு சிகிச்சை பிரிவுக்கான சிகிச்சை முறை ஒரே இடத்தில் கிடைக்கிறது.
புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சுகாதார நிறுவனம் பிப்.4 ஐ உலக புற்றுநோய் தினமாக கடைபிடிக்கிறது. 2023 ல் அனைத்து புற்றுநோயாளிகளுக்கும் சமமான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதே மையக் கருத்து. புற்றுநோயால் பாதித்தவர்களுக்கு அதற்கான முறையான குணப்படுத்த கூடிய சிகிச்சையை கொண்டு சேர்க்க வேண்டியது அவசியம்.
இதை மனதில் வைத்து மதுரை அரசரடி தேவகி புற்றுநோய் சிகிச்சை மையத்தில் இந்தாண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நவீன 'லீனியர் ஆக்ஸிலரேட்டர்' கருவி அமைக்கப்பட்டுள்ளது. இது ஆரம்ப நிலையில் கண்டறியப்படும் புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்துவதோடு பக்க விளைவுகளை குறைக்கிறது. இதில் 4 விதமான கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
'ஐ.எம்.ஆர்.டி.,' சிகிச்சையில் திருத்திய செறிவுடன் புற்றுநோய் பாதித்த இடத்தில் முப்பரிமாண கதிர்வீச்சை செலுத்தி சுற்றியுள்ள நல்ல திசுக்களை பாதுகாக்கிறோம். 'வி.எம்.ஏ.டி.,' என்னும் சுழல் கதிர்வீச்சு மூலம் மிக குறைவான நேரத்தில் துல்லியமான கதிரியக்கத்தை செலுத்தமுடியும். 'ஐ.ஜி.ஆர்.டி.,' என்பது தினமும் நோய் பாதித்த இடத்தை 'சி.டி.,ஸ்கேன்' மூலம் கண்டறிந்து கதிர்வீச்சினை நோயின் அசைவிற்கு ஏற்ப கொண்டு சேர்க்கும் முறை. 'ஸ்டீரியோடாக்டிக்' முறையில் தலை மற்றும் உடலில் உள்ள மிக சிறிய அளவிலான கட்டிகளை குறுகிய நாட்களில் துல்லியமாக கொண்டு சேர்க்கிறது.
தமிழக அரசின் இலவச மருத்துவ காப்பீடு, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள், இ.எஸ்.ஐ., பயனாளிகள், தனியார் மருத்துவ காப்பீடு உள்ளவர்களுக்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
--- டாக்டர் ராஜாராம்
மதுரை
96006 00888