சென்னை: 10 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியவர் வாணிஜெயராம் இன்று (பிப்-4 ) காலமானார். இவருக்கு வயது 78. தமிழ், மலையாளம், குஜராத்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
வேலூரில் இசைக்குடும்பத்தில் பிறந்தவர் வாணிஜெயராம். 1974ல் தீர்க்கசுமங்கலி என்ற படத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடல் மூலம் பலரை கவர்ந்தார். ஏழுஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் என்ற பாடலும் மிக புகழ்பெற்றது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement