திருப்பூர்: பொறியியல் பணி நடப்பதால் கோவையில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் குர்லா எக்ஸ்பிரஸ் வரும், 11ம் தேதி தர்மபுரி, ஓசூர் செல்லாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் ரயில்வே ஸ்டேஷன், மேக்னசைட் சந்திப்பு அருகே பொறியியல் மற்றும் சிக்னல் பராமரிப்பு பணி நடக்கிறது. இதையடுத்து, ஈரோடு - மேட்டூர் இடையேயான பாசஞ்சர் ரயில் இன்று முதல், 8ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.பெங்களூரு - காரைக்கால் ரயில், வரும், 11ம் தேதி முழுமையாக இயங்காது. வரும், 4, 5, 6, 8ம் தேதிகளில் சேலம் - யஷ்வந்த்பூர் ரயில் சேலத்துக்கு பதில், ஓமலுாரில் இருந்து பயணத்தை துவங்கும்.
கோவையில் இருந்து தினசரி மும்பைக்கு இயக்கப்படும் குர்லா எக்ஸ்பிரஸ்(11014), வரும், 11ம் தேதி வழக்கமான வழித்தடத்தில் தர்மபுரி, ஓசூர் செல்லாது. வழித்தடம் மாற்றப்பட்டு, சேலத்தில் இருந்து திருப்பத்துார், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கமாக மும்பையில் இருந்து கோவைக்கு வரும் ரயிலும் பெங்களூரு, சேலம் வழியாக இயக்கப்படும்; ஒசூர், தர்மபுரி செல்லாது.
வரும், 11ம் தேதி ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில்(13352) ஒன்றரை மணி நேரம் தாமதமாக காலை, 6:00 மணிக்கு பதில், 7:30க்கு புறப்படும். எர்ணாகுளம் - பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்(12678) காலை, 9:10க்கு பதில் ஒரு மணி நேரம் தாமதமாக காலை, 10:10க்கு புறப்படும் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.