சென்னை: செயற்கை வைரம் தொடர்பான ஆராய்ச்சிக்கு, சென்னை ஐ.ஐ.டி., தேர்வு செய்யப்பட்டு, மத்திய பட்ஜெட்டில், 242 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய பட்ஜெட்டில், சென்னை ஐ.ஐ.டி.,யில் நடக்க உள்ள செயற்கை வைரம் குறித்த ஆராய்ச்சிக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு, 242 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுஉள்ளது. ஆய்வக வைரம் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது. வைரம் இறக்குமதியை வெகுவாக குறைக்கும். இந்த முக்கியமான திட்டமானது, மத்திய அரசின் 'ஆத்ம நிர்பர்' திட்டத்தில் இணைக்கப்பட்டு உள்ளது.
'சென்னை ஐ.ஐ.டி.,யில் தொழிற்துறை, விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளின் வளர்ச்சிக்கான ஏராளமான திட்டங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. அந்த வரிசையில், செயற்கை வைரம் உருவாக்கும் திட்டம் மிகவும் பெருமைக்குரியது' என, சென்னை ஐ.ஐ.டி., இயற்பியல் துறை பேராசிரியர் ராமச்சந்திர ராவ் கூறியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.