How did Vani Jayaram die? Housemaid sensational information | வாணி ஜெயராம் இறந்தது எப்படி? வீட்டு பணிப்பெண் பரபரப்பு தகவல்| Dinamalar

வாணி ஜெயராம் இறந்தது எப்படி? வீட்டு பணிப்பெண் பரபரப்பு தகவல்

Updated : பிப் 04, 2023 | Added : பிப் 04, 2023 | கருத்துகள் (11) | |
சென்னை: பின்னணி பாடகி வாணி ஜெயராம், வீட்டில் தனியாக வசித்து வந்ததார். பல முறை அழைத்தும் கதவு திறக்கப்படாததால் போலீசுக்கு தகவல் தெரிவித்தேன் என அவரது வீட்டில் பணிபுரிந்தவர் கூறியுள்ளார்.வாணி ஜெயராம் வீட்டில் பணிபுரியும் மலர்கொடி நிருபர்களிடம் கூறுகையில், வாணி ஜெயராம் வீட்டில் தனியாக தான் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக, அவரது வீட்டில் அனைத்து வேலைகளையும் நான்
How did Vani Jayaram die? Housemaid sensational information  வாணி ஜெயராம் இறந்தது எப்படி? வீட்டு பணிப்பெண் பரபரப்பு தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: பின்னணி பாடகி வாணி ஜெயராம், வீட்டில் தனியாக வசித்து வந்ததார். பல முறை அழைத்தும் கதவு திறக்கப்படாததால் போலீசுக்கு தகவல் தெரிவித்தேன் என அவரது வீட்டில் பணிபுரிந்தவர் கூறியுள்ளார்.


வாணி ஜெயராம் வீட்டில் பணிபுரியும் மலர்கொடி நிருபர்களிடம் கூறுகையில், வாணி ஜெயராம் வீட்டில் தனியாக தான் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக, அவரது வீட்டில் அனைத்து வேலைகளையும் நான் தான் செய்து வருகிறேன்.



latest tamil news

இன்றைக்கு 10:45 மணிக்கு நான் வீட்டிற்கு வந்து அழைப்பு மணியை 5 முறை அடித்தும் அவர் திறக்கவில்லை. மொபைலில் அழைத்தும் அதனை ஏற்கவில்லை. எனது கணவர் அழைத்தும் அவர் மொபைலை எடுக்கவில்லை. வீட்டின் கதவும் திறக்கப்படாததால், கீழ் வீட்டினருடன் ஆலோசித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தோம்.


அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்தார். பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து அவருக்கு வாழ்த்துகள் வந்து கொண்டிருந்தன. எந்த நோய்க்கும் எந்த சிகிச்சையும் எடுக்கவில்லை. தற்போது அவரது நெற்றியில் காயம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



latest tamil news

இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டில் சோதனை நடத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X