வேலுார்: வாணியம்பாடியில், இலவச வேட்டி, சேலைக்கு டோக்கன் வாங்கிய போது, கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில் ஒரு தொண்டு நிறுவனத்தின் சார்பில், 2 ஆயிரம் பேருக்கு நாளை(பிப்.,05) இலவச வேஷ்டி, சேலை வழங்குவதாக அறிவித்திருந்தனர். இதற்காக வாணியம்பாடி சந்தை அருகே இன்று(பிப்.,04) அந்த தொண்டு நிறுவனத்தின் சார்பில் டோக்கன் வழங்கப்பட்டது.
அப்போது ஒரே நேரத்தில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டவர் வந்து டோக்கன் பெற முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் பெண்கள் பிடித்துத் தள்ளியதில் பலர் கீழே விழுந்தனர். இதில் கூட்டத்தில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். வாணியம்பாடி போலீசார், தீயணைப்பு துறையினர் அங்கு வந்து கூட்டத்தை கலைத்தனர். இது குறித்து வாணியம்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.