வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அமெரிக்காவின் 'மார்னிங் கன்சல்ட்' நிறுவனம் நடத்திய உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
அமெரிக்க நிறுவனம் ஜன.,26 முதல் 31 வரை, அரசியல் ஆராய்ச்சி அமைப்புடன் இணைந்து இந்த ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் பிரதமர் மோடி 78 சதவீதம் பேரின் ஆதரவை பெற்று பிரபல தலைவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு அடுத்த பட்டியலில் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவேல் லோபஸ் 68 சதவீதம் பேர் ஆதரவுடன் 2வது இடத்தில் உள்ளார்.
3வது இடத்தில் உள்ள, சுவிட்சர்லாந்து அதிபர் அலெயின் பெர்செட்க்கு 62 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 4வது இடத்தில் உள்ளார். அவருக்கு 40 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளார்.