வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
குவஹாத்தி, குழந்தை திருமணங்களை தடுக்க, அசாம் போலீசார் இரு நாட்களாக நடத்தி வரும் வேட்டையில், நேற்று 1,800 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று நடந்த ரெய்டில் மேலும் 375 பேர் கைதாகியுள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான அசாமில் இங்கு 14 - 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியரை திருமணம் செய்வோர் மற்றும் அவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்வோரை, போக்சோ சட்டத்தின் கீழும்,குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க, முடிவு செய்யப்பட்டது.
![]()
|
நேற்று போலீசார் நடத்தி ரெய்டில், இது தொடர்பான விசாரணையில் குழந்தை திருமணங்கள் தொடர்பாக, 4,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் தொடர்புடைய 1,800 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து இன்று தூப்ரி, பார்பேட்டா, கோக்ராஜர் மற்றும் விஸ்வநாத் ஆகிய மாவட்டங்களில் போலீசார் நடத்திய ரெய்டில், 375 பேர் கைதாகினர். கடந்த இரு நாட்களில் கைதானோர் எண்ணிக்கை 2170 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நான்கு நாட்களுக்கு போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.