சென்னை:மஹா சிவராத்திரியை முன்னிட்டு, தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், ஆதியோகி ரத யாத்திரை, தமிழகம் முழுதும் பயணித்து வருகிறது.
கோவை, வெள்ளியங்கிரி மலையடி வாரத்தில், 112 அடி ஆதியோகியின் சிலை, சத்குருவால், 2017ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கோவையில் செயல்படும் தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு சிவராத்திரியை முன்னிட்டு, 7 அடி உயரமுள்ள ஆதியோகி உருவத்துடன் கூடிய ஐந்து ரதங்கள், தமிழகத்தின், 30 மாவட்டங்களில், 25 ஆயிரம் கி.மீ., பயணித்து, வரும் 18ம் தேதி, மஹா சிவராத்திரி அன்று கோவை திரும்ப உள்ளது.
Advertisement