சென்னை:''அரசியல் மாச்சரியங்களுக்கு இடம் கொடுக்காமல், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்,'' என, மாவட்ட கலெக்டர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
புதிதாக நியமிக்கப் பட்ட மாவட்ட கலெக்டர் கள் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடந்தது.
அதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
புதிதாக ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், திருவண்ணா மலை மாவட்டங்களில், கள ஆய்வு நடத்தினேன். அந்த பணி திருப்தி அடையக்கூடிய வகையில் இருந்தது; இது தொடரப் போகிறது.
மாவட்டத்தில் என்னென்ன பணி நடக்காமல் இருக்கிறது; பணிகள் எந்த நிலையில் இருக்கின்றன; நீதிமன்றங்களில் என்னென்ன வழக்கு உள்ளது என்பது குறித்து கலந்தாய்வு நடத்த வேண்டும். விரைவாக அந்தப் பணிகளை நிறைவேற்றும் காரியத்தில் ஈடுபட வேண்டும்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். எந்தவித அரசியல் மாச்சரியங்களுக்கும் இடம் கொடுக்காமல், அரசியல் பார்க்காமல், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற உணர்வோடு மட்டுமே, உங்களது பணி அமைய வேண்டும்.
உங்களிடத்தில் பணிகளை ஒப்படைத்து, நாங்கள் அமைதியாக இருந்து விடுவோம் என்று எண்ண வேண்டாம். நீங்கள் என்ன பணிகளை முடித்துள்ளீர்கள் என்பதை தொடர்ந்து, தலைமைச் செயலர் ஆய்வு செய்யப் போகிறார்; நானும் ஆய்வு செய்வேன்.
அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப் போகிறோம். அப்போது புதிய திட்டங்களை அறிவிக்க உள் ளோம். ஏற்கனவே அறிவித்த திட்டங்கள் எந்த நிலை யில் இருக்கின்றன என்பதை யும், பட்ஜெட்டில் பேசக்கூடிய சூழ்நிலை வரும்.
அதை மனதில் வைத்து, அதற்கு நீங்கள் தகுந்த பதிலை, அரசுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.