பள்ளி மாணவியருக்கு தற்காப்பு பயிற்சிக்கு நிதி | Funding for self-defense training for school girls | Dinamalar

பள்ளி மாணவியருக்கு தற்காப்பு பயிற்சிக்கு நிதி

Added : பிப் 04, 2023 | |
சென்னை:அரசு நடுநிலை, மேல்நிலை பள்ளி மாணவியருக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்டப்படி, ராணி லட்சுமிபாய் தற்காப்பு பயிற்சியின் கீழ், 2015ம் ஆண்டு முதல், அரசு நடுநிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவி யருக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்நிலையில், 2022 - 23ம் ஆண்டுக்கான தற்காப்பு பயிற்சிக்காக, 6,744 நடுநிலை

சென்னை:அரசு நடுநிலை, மேல்நிலை பள்ளி மாணவியருக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்டப்படி, ராணி லட்சுமிபாய் தற்காப்பு பயிற்சியின் கீழ், 2015ம் ஆண்டு முதல், அரசு நடுநிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவி யருக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், 2022 - 23ம் ஆண்டுக்கான தற்காப்பு பயிற்சிக்காக, 6,744 நடுநிலை பள்ளிகளுக்கு 10.11 கோடி ரூபாயை, மாநில திட்ட இயக்ககம் ஒதுக்கீடு செய்துள்ளது.

அதேபோல, 5,519 மேல்நிலை பள்ளிகளில் தற்காப்பு பயிற்சிக்காக, 8.27 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பயிற்சியில் பங்கேற்கும் மாணவியருக்கு கராத்தே, யூடோ, சிலம்பம் உட்பட பல்வேறு பயிற்சிகள் வழங்க, மாநில திட்ட இயக்கம் அறிவுறுத்தி உள்ளது.

இந்த பயிற்சியில், விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவியருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும், மாணவியருக்கு கையில் எளிதில் கிடைக்கும் 'கீ செயின், பென்சில், பேனா' ஆகியவற்றை வைத்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும், பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X