வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில்: வாணி ஜெயராமின் மறைவு திரை உலகிற்கு பெரும் இழப்பு . மெல்லிசை குரல், பல்வேறு மொழிகளில் பாடிய அவரது பாடல்கள் என்றென்றும் நினைவு கூறப்படும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என இரங்கல் செய்தியில் தெரிவித்து உள்ளார்.

கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வாணி ஜெயராமின் உடலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
