வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ' 'கொலீஜியம்' பரிந்துரைத்த உச்ச நீதிமன்றத்துக்கான ஐந்து நீதிபதிகள் நியமனத்திற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் சேர்த்து, 34 நீதிபதிகளுடன் செயல்பட வேண்டிய உச்ச நீதிமன்றத்தில் தற்போது 27 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்.
![]()
|
இதையடுத்து, புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ஐந்து உயர் நீதிமன்ற நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான, 'கொலீஜியம்' கடந்த ஆண்டு டிச., 13ல் பங்கஜ் மிட்டல், பாட்னா , சஞ்சய் கரோல், பி.வி.சஞ்சய் குமார், அசானுதீன் அமானுல்லா, மனோஜ் மிஸ்ரா 5 நீதிபதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இந்த நியமனங்களுக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்தது. இதையடுத்து ஜனாதிபதியின் கையெழுத்திற்கு பின் விரைவில் அறிக்கை வெளியாக உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement