ஹர்தா:மத்திய பிரதேசத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தம்பதி பலியாகினர்.
மத்திய பிரதேச மாநிலம் நர்மதாபுரத்தில் இருந்து கண்ட்வா நகருக்கு பைக்கில், பகவான் சிங் பகேலா 55, அவரது மனைவி சுபத்ரா 50, தம்பதி சென்றனர்.
ஹர்தா மாவட்டம் திமர்னி நகர் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. அதே இடத்தில் சுபத்ரா உயிரிழந்தார்.
பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பகேலா, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.