கேங்க்டாக்:சிக்கிமில், ஒரு குழந்தை பிறந்தவுடன் ௧௦௦ மரங்கள் நடும் திட்டத்தை, மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் துவக்கி வைத்தார்.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையில் சிக்கிம் கிராந்திகிரி மோர்ச்சா ஆட்சி நடக்கிறது. இங்கு, ஒரு குழந்தை பிறந்தவுடன் ௧௦௦ மரங்கள் நடும் திட்டத்தின் துவக்க விழா நடைபெற்றது.
அப்போது புதிதாக குழந்தை பெற்ற சிலருக்கு, மரக்கன்றுகளை வழங்கி பிரேம் சிங் பேசியதாவது:
இந்த பசுமை திட்டம், இந்தியாவிலேயே முதன்முறையாக அமல் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் பிறந்தவுடன் மரக்கன்று நடுவதன் வாயிலாக, பெற்றோர்கள், குழந்தைகள் மற்றும் இயற்கைக்கு இடையே உள்ள தொடர்பை வலுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.