சேலம்:தேசிய நல குழும இணை இயக்குனர் கிருஷ்ணலீலா தலைமையில் மருத்துவ குழுவினர், சேலம் மாவட்டத்துக்கு வந்தனர். மருத்துவ நிபுணர்கள், 9 பேர், 5 குழுவாக பிரிந்து ஆய்வில் ஈடுபட்டனர். கிருஷ்ணலீலா, ஏத்தாப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார்.
சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டப்பணி, மகப்பேறு மருத்துவ சிகிச்சை பிரிவு, மாவட்ட காசநோய் பிரிவு, பாதிக்கப்பட்ட பச்சிளங்குழந்தை பிரிவு, நோய் இயல், நுண்ணுயிரியல் துறைகளில் ஆய்வு நடந்தது.
தொடர்ந்து ஓமலுார், வாழப்பாடி அரசு மருத்துவமனை, காடையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, கன்னங்குறிச்சி, காரிப்பட்டி உள்பட, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் - 7, துணை சுகாதார நிலையம் - 4, என்.ஜி.ஜி.ஓ., காலனியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு நடந்தது. நோயாளிகள் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கும் முறை, போதிய கட்டமைப்பு, தேவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.