வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
ஆத்தூர்:ஆத்தூர் அருகே ரயில் மீது கல் வீசியதில் ரயிலில் பயணித்த பெண் காயம் அடைந்தார். சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்காலில் இருந்து, ஆத்தூர், சேலம் வழியாக பெங்களூருக்கு பயணிகள் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவரது மனைவி அஞ்சலி (55) பெங்களூருவில் இருக்கும் தனது மகன் மணிகண்டனை பார்ப்பதற்காக மணிகண்டனின் மனைவி இளஞ்சியம் மற்றும் இரு குழந்தைகளுடன் வேப்பூர் அருகே உள்ள கூத்தக்குடி ரயில் நிலையத்தில் காரைக்கால் பெங்களூர் விரைவு ரயிலில் ஏறியுள்ளார்.
அப்போது, சேலம் மாவட்டம், ஆத்தூர் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தபோது இந்திரா நகர் பகுதியில் மர்ம நபர்கள் திடீரென ரயில் மீது கல்வீசி தாக்கி உள்ளனர். இதில் ரயிலில் பயணித்த அஞ்சலி மீது கல் விழுந்ததில், அவரது மண்டை உடைந்தது. ஆத்தூர் ரயில் நிலையத்தில் இருந்த ரயில்வே போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement