கலிபோர்னியா: இஸ்ரோ (இந்தியா) நாசா (அமெரிக்கா) இணைந்து உருவாக்கியுள்ள 'நைசர்' என்ற செயற்கை கோள் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்து முறைப்படி இந்தியாவிற்கு நாசா அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பூகம்பம் குறித்து முன்னரே கண்டறிய இந்தியா, அமெரிக்கா இணைந்து ''நைசர்'' எனும் செயற்கை கோளை உருவாக்கி 2023ல் இந்தியாவில் இருந்து ஏவப்பட திட்டமிட்டுள்ளது.
![]()
|
இந்நிலையில் நைசர் செயற்கை கோள் பணிகள் திட்டமிட்டபடி நிறைவடைந்ததாகவும், கலிபோர்னியாவில் இருந்து கப்பல் மூலம் இந்தியா அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் நாசாவின் திட்ட மேலாளர் பில் பரேலா, இஸ்ரோவின் 'நைசர்' திட்ட இயக்குனர் சி.கே. ஸ்ரீகாந்த் உள்ளிட்ட விஞ்ஞானிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முறைப்படி தேங்காய் உடைத்து பூஜை செய்து வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து ஜாடியில் வேர்கடலையை நாசா திட்ட இயக்குனருக்கு இஸ்ரோ திட்ட இயக்குனர் ஸ்ரீகாந்த் வழங்கினார்.
இந்த செயற்கை கோள் விரைவில் இந்தியாவில் சதீஷ்தவான் ஏவு தளத்திலிருந்து ஏவப்பட உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement