வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், வரும் பிப்ரவரி 18ம் தேதி கூடுகிறது. மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இக்கூட்டத்திற்கு நிர்மலா சீதாராமன் தலைமை வகிக்கிறார்.
ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 49வது கூட்டம், வரும் பிப்ரவரி 18ம் தேதி, புதுடில்லியில் நடைபெற உள்ளதாக, டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் 'பான் மசாலா, குட்கா' தயாரிப்புகளுக்கு வரி விதிப்பது தொடர்பாக, மத்திய அமைச்சரவை குழுவின் அறிக்கை மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் அமைப்பது ஆகியவை குறித்து, விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆன்லைன் சூதாட்டம், சூதாட்ட விடுதிகள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றின் மீதான ஜி.எஸ்.டி., வரி விதிப்பு தொடர்பாக, விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.