திருத்தணி:ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து, திருத்தணி வழியாக சென்னை சென்ட்ரல் வரை செல்லும் ரயிலில் கஞ்சா கடத்துவதாக மாவட்ட எஸ்.பி.,சீபாஸ் கல்யாணுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரது உத்தரவின்படி, எஸ்.பி., தனிப்படை எஸ்.ஐ.,குமார் தலைமையிலான போலீசார் நேற்று திருத்தணி அடுத்த, பொன்பாடி ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினார்.
அப்போது திருப்பதியில் இருந்து, சென்னை நோக்கி சென்ற சப்தகிரி விரைவு ரயிலில் சோதனை செய்த போது ஒரு வாலிபர் பையில் கஞ்சா பதுக்கியிருப்பதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
பின் விசாரணையில், மதுரை மாவட்டம், ஆறாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார், 25, என, தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து, ஆறுமுகத்தை திருத்தணி மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிந்து அஜித்குமாரை கைது செய்தனர்.