திருத்தணி:திருத்தணி பேருந்து நிலையம் அருகே சன்னிதி தெருவில் உள்ள தியேட்டர் ஒன்றின் முன், 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
அவ்வழியாக சென்றவர்கள் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பது குறித்து, திருத்தணி மடம் கிராம நிர்வாக அலுவலர் கவுரி மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதை தொடர்ந்து திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த முதியவரின் பெயர், விலாசம் விபரம் தெரியவில்லை. திருத்தணி போலீசார்வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.